மிளிரும் உலகம் LED உடன்..#3 இயற்கையுடன் மனிதனின் போட்டி…

ஒரு குறுகிய காலத்தில் மனிதனின் தேவை அதிகரிக்க அதன் நிறத்தை மாற்ற அதாவது நிறத்தில் சூரியனுக்கு போட்டி போட எண்ணினான்.
Inline image 1
ஆனாலும் திறன் குறைவாக இருக்க வேண்டும். ஆகவே  அவனிடத்தில் ஏற்கனவே இருந்த tungsten இலைகளை பயன்படுத்தவே எண்ணினான்.ஆனால் இம்முறை ஒரு இலை அல்ல இரண்டு இலைகள் இருபுறமும் வைத்தான் நீண்ட உருண்ட கண்ணாடி குழாய் அமைப்பில் அதனை வடிவம் செய்தான்,அதில் UV கதிர்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள பாதரச ஆவி பூச்சை பயன்படுத்தினான் .  அதனுள் வாயுக்களை அடைத்தான் அந்த வாயுக்கள் மந்த வாயுக்களான ஆர்கன் அல்லது கிரிப்டான் பயன்பட்டது,
Inline image 2
இரண்டையும் சேர்த்து இப்பொழுது எரியூடினான் ஆனால் அது எரியவில்லை.காரணம் மின்னழுத்தம் அதிகம் தேவைப்பட்டது.ஆனால் அந்த வாயுக்களை தூண்ட  மிக அதிக அளவு மின்சாரமான கிலோவோல்ட் அலகில் தேவைப்பட்டது,அதாவது பல நூறு மடங்கு மின்னழுத்தம் தேவைப்பட்டது ஆகவே,அந்த வாயுக்களை முடிக்கிவிட(ஆரம்பம் மட்டும் தான்) தேவையான மின்சாரத்தை எதனில் இருந்து பெறுவது என்பது கேள்விக்குறியானது ,எனவே அவன் உண்டாக்கியது தான் தடுப்பான் (choke) அதாவது ஒரு நிலையான மின்னழுத்ததை கொண்டு இதனை எரியூட்ட முடியவில்லை அதனால் அவன் குறைந்த அளவு மின்சாரத்திலிருந்து அதிக அளவு மின்சாரமாக மாற்ற இந்த தடுப்பானை பயன்படுத்தினான்.
 Inline image 3
தடுப்பான் என்பது ஒரு மின் தூண்டும்  கலன், அது இரும்பாலான அடுக்கு மீது செப்பு கம்பியால் சுற்றப்பட்டுள்ளது..அதில் சிறிதளவு மின்சாரம் சேமிக்கப்படும்..இதை பயன்படுத்தி விளக்கில் உள்ள வாயுக்களை முடுக்க பயன்பட்டது..
இது சுமாராக நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சார அளவான 230 வோல்ட் தான்,அதில் இந்த விளக்கில் உள்ள வாயுக்களை தூண்டி மின்னூட்டம் பாய வைக்க வேண்டும் அதற்க்கு 11 கிலோவோல்ட் அதாவது 11000 வோல்ட் தேவைப்பட்டது அதற்க்கு தான் இந்த தடுப்பான் தேவைப்பட்டது.தடுப்பானின் பணிக்கு முன்பு ஸ்டார்ட்டரின் வேலை மிகவும் அவசியமாக இருந்தது.
அதாவது,
Inline image 4
விளக்கை முடுக்கும்போது (ON)  பொழுது நேரடியாக  மின்சாரமானது விளக்கிற்கு செல்ல அனுமதி இல்லை,அதாவது இந்த ஸ்டார்ட்டர் விளக்குக்கு பக்கவாட்டில் இணைக்கப்பட்டு இருக்கும்,இது அதில் உள்ள வாயுக்களை கிளர்ச்சியடைந்த  பின்னர் மின்சாரத்தை அனுமதிக்கும்,
மேலும்  இந்த 230 வோல்டை தடுப்பானினூடே செலுத்தி தேவையான மின்சாரமனான 11000 வோல்ட் கிடைத்தது அதே அளவு மின்சாரம்  தொடர்ந்து தேவைப்படவில்லை,பிறகு  அது இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.அதாவது 230 வோல்ட் தான் அதன் பயன்பாட்டு அளவு..
மேலும் விஞ்ஞானம் வளர்ந்து இந்த ஸ்டார்ட்டர்-ன் பயன்பாட்டை நிறுத்த மின்னணுவியல் தடுப்பான் தயார் செய்யபட்டு பயன்படுத்த ஆரம்பித்தனர்,
Inline image 5
இந்த செயல்பாட்டின் காரணமாக வைத்து அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் தயார் செய்யப்பட்டது……

மிளிரும் உலகம் LED உடன்..#2 வெளிச்சம் கடந்து வந்த பாதை…

மக்களின் தேவையே புதிய கண்டுபிடிப்புகளுக்கு காரணம்…..

 
 
LED யில் அடிமட்டம் வரை போக வேண்டும் ஆகவே ஒரு சிறிய முன்னோட்டம்…
முந்தைய காலங்களில் அகல் விளக்கில் மட்டுமே வாழ்ந்து வந்த மக்களுக்கு மின்சார விளக்குகள் கண்டுபிடிப்பதற்கு முன்னால் இருந்து  வந்த வாழ்க்கை வெளிச்சம் இல்லாமல் இல்லை இருந்தது குறைவாக…அப்போது வாழ்ந்து வந்த மக்கள் தனக்கு தேவையான வெளிச்சத்தை அகல் விளக்குகளே கொடுத்தன….. அப்போது  அவர்கள் பயன்படுத்திய  அகல் விளக்குகள் காற்று வீசும்போது அணைந்துவிடும்,
Inline image 1
ஆகவே அவற்றை பாதுகாப்பாக வைக்க எண்ணி கண்ணாடி குடுவைக்கு நடுவில் வைத்து விளக்கை தயார் செய்தனர்,ஆனால் அது மிக விரைவில் அணைந்து போனது அப்பொழுதுதான் தான் தெரிந்தது நெருப்பு  எரிய காற்று  தேவை என உடனே  ஒரு சிறிய திறப்பு வைத்து பற்ற வைத்தனர்.அது பேச்சு வழக்கில்  முட்டை கிளாஸ் என்றும் அழைக்கப்பட்டது.
Inline image 2
அதன் பிறகு பாதுகாப்பு கருதி அந்த திறப்பை மறைக்கவும் வேண்டும்,மேலும் விளக்கின் வெளிச்சமும் அதிகமாக வேண்டும் அதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த அரிக்கன் விளக்கு…
Inline image 3
இந்த விளக்கு எண்ணையின் பயன்பாட்டு அளவு அதிகம் .ஆகவே அதில் மாற்றம் செய்ய எண்ணினர்…
இதிலும் பூர்த்தியாகாத மனிதன் இருந்து  வந்தான்..இரும்பு செய்யும் கொல்லன் அதன் உருவத்தை மாற்றுவதற்காக அதனை வெப்பபடுத்தினான் அப்பொழுது உண்டான மஞ்சள் நிற தணல் ஒரு பொறி போல் தட்டியது (அதான் ஐடியா வந்துச்சான்)…..
Inline image 4
அந்த தருணத்தில் தான் இந்த சூட்டின் காரணமாக தான் இந்த வெளிச்சம்  உண்டாகிறது (இன்னும் அறிவியல் ரீதியாக சொல்ல வேண்டுமென்றால்(incandescence) சுடர் ஒளி என்பது மின் காந்த கதிர்வீச்சால் உண்டானது இது வெண்சுடர் வெப்ப கதிர்வீச்சு என்று பெயர் ) ஆகவே அதை கண்ணாடி குடுவைக்குள் வைத்து சரி செய்ய முயற்சி செய்யும் பொழுது வெற்றி கண்டான், அதாவது அவன் ஒரு முனையில் சூடு செய்து மற்றொரு முனையை கண்ணாடி குடுவைக்குள் வைத்து பார்த்தாள் ஒளியின் பிம்பம் அருமையாக இருந்தது,இது வெப்பம் அதிகம்  அதனால் கண்ணாடி குடுவையை தாங்கும் அளவிற்கு வடிவமைத்தான்.
வெப்பத்தின் அளவுக்கு ஏற்றார் போல் அதன் நிறத்தை வேறுபடுத்தலாம்..படம்…
Inline image 5
இதே போன்று மற்றொரு இடத்தில வரும் குழப்பிக்கொள்ள  வேண்டாம்..
அதிலும் போதாத அவன் அப்பொழுதுதான் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை பயன்படுத்தி வெளிச்சம் உண்டாக்க முயன்றான் .அதனால் பழைய வடிவமான விளக்கையே அவன் தனது அஸ்திவாரம் போல பயன்படுத்தினான்,
கண்ணாடிகுடுவையை உண்டாக்கி அதனூடே முதலில் தடிமனான காகிதம் மற்றும் இரும்பு பொருட்கள் கொண்டு உண்டாக்கினான் பிறகு அதை சுருக்கி சுருள் இலை (tungsten)  க்கு மாறினான் அதை தாங்கும் பிடிமானத்தை உருவாக்கி மின்சாரத்தின் உதவியோடு அதனை வெப்பப்படுத்தி தனக்கு வேண்டிய ஒளியை உண்டாக்கினான்..
அது சிறிது நேரம் எரிந்து பிறகு காற்றின் பற்றாக்குறையால் அது வெடித்து சிதறியது..
அதன் பின்னர் முன்னர் கூறியது போல் காற்று அவசியம் என்பதை உணர்ந்த அவன் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயற்கை வாயுக்களை பயன்படுத்தினான்.அவை அடர்த்தி மிகுந்த நைட்ரோஜென்  மற்றும் ஆர்கன் கலந்த கலவையை கொண்டு தொடர்ந்தான் அதில் வெற்றியும் பெற்றான்…
சுருள் இலைக்கு மாற காரணம் விளக்கின் ஆயுள் காலத்தை அதிகபடுத்தவும்,மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் ஒவ்வொன்றையும் வடிவமைத்தான்…
விளக்குடன் தாமஸ் எடிசன்,
Inline image 6
மேலும்,
அரிப்பெடுத்தவன் கையும்
ஆன்ட்ராய்ட் பிடிச்சவன் கையும்,
சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க….:)
அதே தான் இங்கேயும்…தேடல் ஆரம்பித்தது…………..
(குறிப்பு: படங்கள் தேவை இல்லை என்றால் தனிமடலில் திட்டவும்,
என்ன நான் சொல்லவந்தேன்  எதுவென்று புரியாது அவ்வளவே :))
அதுவா முக்கியம் இவன் எப்பவுமே இப்புடி தான் மொக்கை போடுவான் சும்மா திட்டலாம் என்றால் வருக வருக. என அன்புடன் வரவேற்கிறேன்… )
தொடரும்…