மிளிரும் உலகம் LED உடன்..#2 வெளிச்சம் கடந்து வந்த பாதை…

மக்களின் தேவையே புதிய கண்டுபிடிப்புகளுக்கு காரணம்…..

 
 
LED யில் அடிமட்டம் வரை போக வேண்டும் ஆகவே ஒரு சிறிய முன்னோட்டம்…
முந்தைய காலங்களில் அகல் விளக்கில் மட்டுமே வாழ்ந்து வந்த மக்களுக்கு மின்சார விளக்குகள் கண்டுபிடிப்பதற்கு முன்னால் இருந்து  வந்த வாழ்க்கை வெளிச்சம் இல்லாமல் இல்லை இருந்தது குறைவாக…அப்போது வாழ்ந்து வந்த மக்கள் தனக்கு தேவையான வெளிச்சத்தை அகல் விளக்குகளே கொடுத்தன….. அப்போது  அவர்கள் பயன்படுத்திய  அகல் விளக்குகள் காற்று வீசும்போது அணைந்துவிடும்,
Inline image 1
ஆகவே அவற்றை பாதுகாப்பாக வைக்க எண்ணி கண்ணாடி குடுவைக்கு நடுவில் வைத்து விளக்கை தயார் செய்தனர்,ஆனால் அது மிக விரைவில் அணைந்து போனது அப்பொழுதுதான் தான் தெரிந்தது நெருப்பு  எரிய காற்று  தேவை என உடனே  ஒரு சிறிய திறப்பு வைத்து பற்ற வைத்தனர்.அது பேச்சு வழக்கில்  முட்டை கிளாஸ் என்றும் அழைக்கப்பட்டது.
Inline image 2
அதன் பிறகு பாதுகாப்பு கருதி அந்த திறப்பை மறைக்கவும் வேண்டும்,மேலும் விளக்கின் வெளிச்சமும் அதிகமாக வேண்டும் அதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த அரிக்கன் விளக்கு…
Inline image 3
இந்த விளக்கு எண்ணையின் பயன்பாட்டு அளவு அதிகம் .ஆகவே அதில் மாற்றம் செய்ய எண்ணினர்…
இதிலும் பூர்த்தியாகாத மனிதன் இருந்து  வந்தான்..இரும்பு செய்யும் கொல்லன் அதன் உருவத்தை மாற்றுவதற்காக அதனை வெப்பபடுத்தினான் அப்பொழுது உண்டான மஞ்சள் நிற தணல் ஒரு பொறி போல் தட்டியது (அதான் ஐடியா வந்துச்சான்)…..
Inline image 4
அந்த தருணத்தில் தான் இந்த சூட்டின் காரணமாக தான் இந்த வெளிச்சம்  உண்டாகிறது (இன்னும் அறிவியல் ரீதியாக சொல்ல வேண்டுமென்றால்(incandescence) சுடர் ஒளி என்பது மின் காந்த கதிர்வீச்சால் உண்டானது இது வெண்சுடர் வெப்ப கதிர்வீச்சு என்று பெயர் ) ஆகவே அதை கண்ணாடி குடுவைக்குள் வைத்து சரி செய்ய முயற்சி செய்யும் பொழுது வெற்றி கண்டான், அதாவது அவன் ஒரு முனையில் சூடு செய்து மற்றொரு முனையை கண்ணாடி குடுவைக்குள் வைத்து பார்த்தாள் ஒளியின் பிம்பம் அருமையாக இருந்தது,இது வெப்பம் அதிகம்  அதனால் கண்ணாடி குடுவையை தாங்கும் அளவிற்கு வடிவமைத்தான்.
வெப்பத்தின் அளவுக்கு ஏற்றார் போல் அதன் நிறத்தை வேறுபடுத்தலாம்..படம்…
Inline image 5
இதே போன்று மற்றொரு இடத்தில வரும் குழப்பிக்கொள்ள  வேண்டாம்..
அதிலும் போதாத அவன் அப்பொழுதுதான் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை பயன்படுத்தி வெளிச்சம் உண்டாக்க முயன்றான் .அதனால் பழைய வடிவமான விளக்கையே அவன் தனது அஸ்திவாரம் போல பயன்படுத்தினான்,
கண்ணாடிகுடுவையை உண்டாக்கி அதனூடே முதலில் தடிமனான காகிதம் மற்றும் இரும்பு பொருட்கள் கொண்டு உண்டாக்கினான் பிறகு அதை சுருக்கி சுருள் இலை (tungsten)  க்கு மாறினான் அதை தாங்கும் பிடிமானத்தை உருவாக்கி மின்சாரத்தின் உதவியோடு அதனை வெப்பப்படுத்தி தனக்கு வேண்டிய ஒளியை உண்டாக்கினான்..
அது சிறிது நேரம் எரிந்து பிறகு காற்றின் பற்றாக்குறையால் அது வெடித்து சிதறியது..
அதன் பின்னர் முன்னர் கூறியது போல் காற்று அவசியம் என்பதை உணர்ந்த அவன் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயற்கை வாயுக்களை பயன்படுத்தினான்.அவை அடர்த்தி மிகுந்த நைட்ரோஜென்  மற்றும் ஆர்கன் கலந்த கலவையை கொண்டு தொடர்ந்தான் அதில் வெற்றியும் பெற்றான்…
சுருள் இலைக்கு மாற காரணம் விளக்கின் ஆயுள் காலத்தை அதிகபடுத்தவும்,மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் ஒவ்வொன்றையும் வடிவமைத்தான்…
விளக்குடன் தாமஸ் எடிசன்,
Inline image 6
மேலும்,
அரிப்பெடுத்தவன் கையும்
ஆன்ட்ராய்ட் பிடிச்சவன் கையும்,
சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க….:)
அதே தான் இங்கேயும்…தேடல் ஆரம்பித்தது…………..
(குறிப்பு: படங்கள் தேவை இல்லை என்றால் தனிமடலில் திட்டவும்,
என்ன நான் சொல்லவந்தேன்  எதுவென்று புரியாது அவ்வளவே :))
அதுவா முக்கியம் இவன் எப்பவுமே இப்புடி தான் மொக்கை போடுவான் சும்மா திட்டலாம் என்றால் வருக வருக. என அன்புடன் வரவேற்கிறேன்… )
தொடரும்…

மிளிரும் உலகம் LED உடன்..#1

அன்பு நண்பர்களே வணக்கம்,
 
எந்த ஒரு பாடத்தையும் புதிதாக படித்தால் மட்டும் போதாது அது செயல்பாட்டில் இருக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் அதை சொல்லி கொடுக்க வேண்டும்.இல்லையென்றால் மறந்து போகும்.
 
ஆகவே எனக்கு தெரிந்து என்னால் உருவாக்கப்பட்ட நான் தேடி சேகரித்தவற்றை,புதிதாக  படித்தவற்றை மொழி பெயர்த்தும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
 
சில சூழ்நிலைகளில் ஆங்கிலம் பயன்படுத்த வேண்டிய கட்டாயம்.எனவே மன்னிச்சு..
 
1.”LED”லைட்:
 
அப்புடின்னா  என்ன? 
 
ஒளி உமிழும் டையோடு(Light Emitting Diode.)
 
விளக்கம்:(செயல்படும் முறை)
ஒரு குறைகடத்தி டயோடு (semiconductor diode)இல் மின்னழுத்தத்தை செலுத்தும் பொழுது அது ஒளிர்கிறது..
 
நம்ம கதைக்கு வருவோம்,
ஆரம்ப காலங்களில்  எல்லாம்  குண்டு விளக்கு,முழு நீள விளக்கு(Tube light )இன்னும் நிறைய விளக்குகள் இருந்தன.அவைகள் போதுமானதாக இல்லை ஆகவே, 
 

 
அவைகளில் சிறிது மாறுதல்கள் செய்ய ஆராய்ச்சியாளர்கள் என்னினர் அவைகள் தான்…..
 
கச்சிதமான ஒளிரும் விளக்கு(CFL -Compact Fluorescent Lamp)

 
 
 
 
மற்ற விளக்குகளுடன் ஒப்பிடும் பொழுது  இதன் அளவும்(size) எடுத்துகொள்ளும் திறனும்(power) மிக குறைவே.
எனினும்,ஆராய்ச்சியாளர்கள் நிறுத்தாமல்  தொடரவே  அவர்களால் LED என்ற படைப்பு கிடைத்தது.
Inline image 1
அவற்றை பற்றி தெளிவாக விளக்க உரை கொடுக்கவே விளைகிறேன்.
உங்களின் ஆதரவு எனக்கு தேவை…
வேலை பளுவின் காரணமாக சிறிது தாமதம் ஏற்படலாம்..
 
என்றும் அன்புடன்,
அரும்பானவன்